Saturday, October 6, 2012

உள்ளமா உருவமா!

என் உருவத்தை வைத்து என்னை நீ எடை போட்டால் , மன்னிக்க வேண்டுகிறேன்...என் உள்ளதை அறிந்து கொள்ளும் தகுதியை நீ இழந்து விட்டாய் !!!

Wednesday, March 21, 2012

மதமா? கடவுளா?

மதத்தை பார்க்கிறவன் கடவுளை காண்பதில்லை! கடவுளை காண்கிறவன் மதத்தை பார்ப்பதில்லை!
ஏனென்றால், கடவுள் மதம் சார்ந்தவர் அல்ல, மாறாக மனிதம் சார்ந்தவர்...!

அதற்காக ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுகிறவன் கடவுளுக்கு எதிரானவன் என்று கருத்து கொள்ள வேண்டாம். என்னைப் பொறுத்தவரையில் மதம் என்பது ஒரு வழிபாட்டு முறையே (A style of worship). மதத்தின் பெயரால் பேதங்கள் வளர்ப்பது அறிவீனம். மதத்தின் பெயரால் வன்முறை செய்வது சாவான பாவம். அஃது கடவுளையே எதிர்க்கும் செயல்.

கடவுளை எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம். முதலில் மனிதனாய் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். மனிதரைக் கண்டு கொள்ளாத எவரையும் கடவுளும் கண்டு கொள்வதில்லை..

கடவுளை அடைவதற்கு மதம் தான் ஒரே வழி என்று இல்லை...! மனித உணர்வுகளைப் புரிந்து கொண்டு, எவருக்கும் இடறில்லாமல் வாழ்ந்தாலே போதும்...கடவுளை அடைந்து விடலாம்!

மதத்தின் பெயரால் வன்முறைகள் வேண்டாம், பேதங்கள் வளர்க்க வேண்டாம்...கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர்..

கடவுளை, மனிதராகிய நாம் பிரிக்க வேண்டாம்.. மனிதனாய் வாழ்வோம்! மனிதத்தை பேணுவோம்! உலக அமைதிக்காய்  உழைப்போம்!

Wednesday, February 15, 2012

பின்பற்றுவோம் கொள்கைகளை, மனிதர்களையல்ல..!

நம் நாடு மிகப்பெரிய மகான்களும் அறிஞர்களும் வாழ்ந்த நாடு!

பற்பல உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட மனிதர்களால் வளப்படுத்தப்பட்ட நாடு!

நம் நாட்டில் உள்ளது போல் உயர்ந்த தத்துவங்களை மற்ற நாடுகளில் காணுதல் மிக அரிது. அத்தகு உயரிய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கொண்ட ஒரு தேசத்தில் வாழ்கிறோம் என்பதில் பெருமை கொள்ளுதல் வேண்டும்..!

ஆயினும் நமிடயே சிற்சில குறைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. அத்தகு உயர்ந்த கோட்பாடுகளையும், கொள்கைகளையும் ஏதோ பெயரளவில் கடைப்பிடிக்கின்றோமே அல்லாமல் நம்முடைய மனித வாழ்வில் இதனை மெய்யாக பின்பற்ற மறுக்கின்றோம். இதற்க்கு முக்கியமான ஒரு காரணமாக நான் கருதுவது என்னவென்றால், நாம் அத்தகு உயரிய மனிதரைப் போல் பெயரெடுக்க அவரைப் பின்பற்றுகிறேன் என்று கூறுகின்றோமே அல்லாமல் அவருடைய உண்மை கொள்கைகளை மறந்து விடுகிறோம். அவர்களுடைய புற வாழ்க்கையை வேடமாய் அணிந்து கொள்கிறோம், ஆனால் அகவாழ்க்கையை முழுதுமாக விட்டு விடுகிறோம். எப்படி புறவாழ்க்கையை பின்பற்றுகிறோமோ அவ்வாறே அக வாழ்க்கையையும் பின்பற்றியிருந்தால் நாடு நலம் பெற்றிருக்கும்.

நான் என் வாழ்வில் பலரைக் கடந்து வந்திருக்கிறேன். பலர் 'நான் அவரைப் பின்பற்றுகிறேன், இவரைப் பின்பற்றுகிறேன் ... நான் அவருடைய இயக்கதை சார்ந்தவன்...' என்றெல்லாம் கூறியிருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் உண்மையில் அவர்களுடைய வாழ்க்கை முறையை கூர்ந்து ஆராய்ந்தால் அவர்கள் பின் பற்றுவதாக கூறுபவர்களின் கொள்கைகளை மறுதலிப்பதாகவே  இருக்கின்றது.

எடுத்துக்காட்டு கூறவேண்டுமானால் "நான் வள்ளலாரைப் பின்பற்றுகிறேன்" என்று கூறுவார்கள், ஆனால் அவருடைய "சுத்த சன்மார்க்க" கொள்கை கூறும் சமத்துவத்திற்கு புறம்பாக சாதி சார்ந்த கொள்கைகளை தம் அகவாழ்வில் பின்பற்றுவர். " நான் கிறித்துவை பின் பற்றுபவன்" என்பார்கள், ஆனால் அவர்களுடைய வாழ்வில் சமத்துவ கொள்கைக்கோ, மன்னிப்பிற்கோ இடமே இருந்திருக்காது.. " நான் பெரியார் வழி வந்தவன்" என்று கூறுபவனோ, அவர் பாராட்டிய சமத்துவத்திற்கு எதிராக வாழ்கிறான். ஏதோ பெயரளவில் நான் வள்ளலாரைப் பின்பற்றுபவன், கிறித்தவன், பெரியாரைப் பின்பற்றுபவன் என்று சமூகத்திற்கு தன்னைத்தானே அடையாளப்படுத்திக் கொள்வதாலோ, தினமும் கோவிலுக்கு செல்வதாலோ, செல்லாதிருப்பதாலோ நாம் அவர்களைப் பின் பட்ட்ருகிரோம் என்று பொருள் அல்ல. மாறாக, நாம் அவர்களை அவமானப்படுத்துவதாகவே அஃது அமைகிறது. அத்தகு வாழ்வு வாழ்வதற்கு, நாம் அவர்களை கேவலப்படுத்தாமலாவது இருக்கலாம்.
ஏதோ சிலை விபத்தோ, மணி மண்டபம் கட்டுவதோ அல்ல நாம் அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை. மாறாக, அவர்களுடைய உண்மை வாழ்வை மனதில் கொண்டு அவர்கள் காட்டிய கோட்பாடுகளையும், கொள்கைகளையும் பின் பற்றுவதே உண்மையான மரியாதை.

சமூகத்தில் நற்பெயர் எடுப்பதற்கு ஏன் இந்த வெளி வேடம்?

வெளி வேட காரர்களால் அந்த தலைவர்களுக்குதான் அவமானம்...

மனிதனை பின்பற்றுவதோ, அவர் போல உடை, நடை, பாவனை கொள்வதோ அல்ல பின்பற்றுதல்....உண்மையிலயே அவர்கள் கூறிய கோட்பாடுகளில் ஒன்றையேனும் தெளிவாக கடைப்பிடித்தால், அதுவே நாம் செய்கின்ற மிகப்பெரிய செயல்...அதுவே அவர்களை கவுரவப்படுத்தும்...

என்னிடம் கேட்டால், ஏன் மனிதர்களை பின்பற்ற வேண்டும்? அவர்கள் கூறியனவற்றில் நல்லன ஏதும் இருப்பின் அதை மட்டுமே நம் வாழ்வில் கொண்டு வாழ்ந்தால் போதாதா என்றுதான் கூறுவேன்...

இன்றைய இளைய சமுதாயத்தின் சக்தி வீணாவதற்கு முக்கிய காரணமும் இதுவே...நடிகர்கள் பின்னால் செல்கிறார்கள், அவர்கள் கூறுகின்ற நற்கருத்துகளையோ மறந்து விடுகிறார்கள்...தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள்...

இந்நிலை என்றாவது மாறும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்...

Monday, February 6, 2012

நாட்டுக்கென்று உழைத்த ஒரு உயர்ந்த மனிதர்

தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!

மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!

சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், 'கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!

மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. 'நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு' என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!

பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். 'நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?' என்று கமென்ட் அடித்தார்!

இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!


 அவர்தான் காமராஜர்!

Sunday, January 15, 2012

மனிதனாய் வாழ விரும்புகிறேன்

நான் சிறு வயதில் கோயிலில் ஒரு பாடல் கேட்டதுண்டு ...
ஒரு அருமையான பாடல் அது...
"ஒரு வரம் நான் கேட்கின்றேன், திருப்பதம் நான் பணிகின்றேன்;
மனிதனாக, முழு மனிதனாக...வாழும் வரம் நான் கேட்கின்றேன்.."
இந்த பாடலை பலரும் கேட்டிருக்கலாம்... குமரி மாவட்டத்தில் இந்த பாடல் ஒலிக்காத ஆலயமே இல்லை என்று சொல்லலாம்...

இன்றைய உலகிற்கு தேவையான ஒரு சிந்தனை  அந்த பாடலில் உள்ளது..
ஒவ்வொரு  மனிதனும் பின்பற்ற வேண்டிய சிந்தனை!

"மனிதனாய் வாழ்" என்கின்ற சிந்தனை தான் அது...

இன்றைய சமூகத்தில் மனிதன் சாதியாலும், மதத்தாலும் பிரிந்து கிடக்கிறான்...
ஒன்றும் இல்லாததற்கு நாம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்...

மனிதனை மனிதனாய் வாழ வைக்க உருவானதே மத அமைப்புகள்..ஆனால் அவையோ இன்று மனிதநேயத்தை மறந்து, மனிதனுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் ஒரு சக்தியாக மாறி வருகின்றதோ என்ற ஐயமே எனக்குள் இப்படி ஒரு சிந்தையை தட்டி எழுப்பியுள்ளது...

எனக்கு பிறப்பு கொடுத்தது ஒரு சாதியோ மதமோ அல்ல, மாறாக ஒரு மனித தாயானவள் தான்...அப்படியென்றால் நான் முதலில் மனிதன் தானே...

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மதத்தை பற்றி ஒரு கருத்து இருக்கும்... என்னை பொறுத்தவரையில், கடவுளை அடைய ஒவ்வொருவரும் பின்பற்றும் ஒரு வழி முறையே மதம்.. மதங்கள் வெவ்வேறு இருக்கலாம், ஆனால் அவை சேரும் இடம் ஒன்றே.. ஒவ்வொரு மதமும் அவை பின்பற்றும் சடங்கு முறைகளால் மட்டுமே வேறுபடுகின்றன (different style of worship). அனைத்து மதமும் போதிப்பது அன்பு மட்டுமே... அப்படியென்றால் "அன்பு" தானே அனைத்துக்கும் அடிப்படை... ஆகவே அன்பை மட்டுமே நாம் பின்பற்றலாமே... நாம் எந்த வகையில் குறைந்து விட போகிறோம், நம் அன்பை மற்றவர்களுக்கு காட்டும் போது... மதம் என்ற போர்வையை நாம் களைந்து எறிவோம், அன்பு என்ற ஆடையை அணிவோம், உலகை அன்பால் நிரப்புவோம்... நாளைய சமுதாயமாவது பிரிவு இல்லாமல் இருக்குமே.. அன்பை நிலை நாட்டவே கடவுள் இப்புவிக்கு வந்தார், அவதாரம் எடுத்தார் என்று படிக்கின்ற நாம் ஏன் அன்பை விடுத்தது விட்டு மதத்தை பற்றி பிடித்து கொண்டிருகிறோம்...

நாம் மனிதர்கள் என்பதை முதலில் உணருவோம்...!

"அன்புதான் என் மதம், மனிதம்தான் என் சாதி..."


நான் ஒரு கிறித்தவனகவோ, இந்துவாகவோ, இஸ்லாமியனாகவோ வாழ விரும்பவில்லை, மாறாக "மனிதனாய்" பிறருக்கு "அன்பு" காட்டி வாழ விரும்புகிறேன்......


என்னை வாழ விடுவீர்களா?

Wednesday, December 7, 2011

நான் ரசித்த பாடல் வரிகள்...

நேற்று இல்லாத மாற்றம் என்னது?
காற்று உன் காதில் ஏதோ சொன்னது...
இதுதான் வாழ்க்கை என்பதா...விதியின் வேட்கை என்பதா...
சதியின் சேர்க்கை என்பதா...சொல் மனமே...

கொடியில் பூக்கள் எல்லாம் காம்பு தாங்கும் வரை..
கூந்தல் பூக்கள் எல்லாம் உறவு வாழும் வரை...
காதல் நினைவொன்று தானே காற்று தீரும் வரை..
மழையின் பயணம் எல்லாம் மண்ணை தீண்டும் வரை...
படகின் பயணம் எல்லாம் நதியை தாண்டும் வரை...
மனித பயணங்கள் எல்லாம் வாழ்க்கை தீரும் வரை...

(நேற்று இல்லாத...)

காற்று வழி போவதை நாற்று சொல்கின்றது...
நேற்று மழை பெய்ததை ஈரம் சொல்கின்றது...
கண்ணில் வழிகின்ற கண்ணீர் காதல் சொல்கின்றது...
இலைகள் வீழ்ந்தாலுமே கிளையில் தளிர் உள்ளது...
இரவு தீர்ந்தலுமே இன்னும்  நிலவுள்ளது..
பாதி உயிர் போன போதும் மீதி வாழ்வுள்ளது...


(நேற்று இல்லாத...)

வாழ்க்கை

ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்ந்தோம், ஏதோ மடிந்தோம் என்று சமூகத்திற்கு பயனில்லாமல் வாழ்கின்ற வாழ்க்கை எதற்கு?

ஒவ்வொரு மனித வாழ்வும் ஒரு சரித்திரம் ஆக வேண்டும்..

சமூகம் அதனால் பயன் பெற வேண்டும்...

நம் வாழ்வு ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் அமைய வேண்டும்...


அதுதான் வாழ்க்கை...

ஏதோ ஒருவனுக்காவது நம் வாழ்வு ஒரு தூண்டுகோலாய் அமைய வேண்டும் என்ற இலட்சியத்தோடு வாழு...

வாழ்க்கை ஒரு பரிசு, அதை விரயமாக்கி விடாதே..

ஒவ்வொரு வாழ்க்கையின் மதிப்பும் யாருக்கும் வாழும் போது தெரிவதில்லை, அதை இழந்த பின்பு தான் தெரிகிறது...

நாமாவது இப்போதே உணர்ந்து இவ்வாழ்வை பொருள் உள்ள ஒன்றாக வாழுவோம்....!