Wednesday, December 7, 2011

நான் ரசித்த பாடல் வரிகள்...

நேற்று இல்லாத மாற்றம் என்னது?
காற்று உன் காதில் ஏதோ சொன்னது...
இதுதான் வாழ்க்கை என்பதா...விதியின் வேட்கை என்பதா...
சதியின் சேர்க்கை என்பதா...சொல் மனமே...

கொடியில் பூக்கள் எல்லாம் காம்பு தாங்கும் வரை..
கூந்தல் பூக்கள் எல்லாம் உறவு வாழும் வரை...
காதல் நினைவொன்று தானே காற்று தீரும் வரை..
மழையின் பயணம் எல்லாம் மண்ணை தீண்டும் வரை...
படகின் பயணம் எல்லாம் நதியை தாண்டும் வரை...
மனித பயணங்கள் எல்லாம் வாழ்க்கை தீரும் வரை...

(நேற்று இல்லாத...)

காற்று வழி போவதை நாற்று சொல்கின்றது...
நேற்று மழை பெய்ததை ஈரம் சொல்கின்றது...
கண்ணில் வழிகின்ற கண்ணீர் காதல் சொல்கின்றது...
இலைகள் வீழ்ந்தாலுமே கிளையில் தளிர் உள்ளது...
இரவு தீர்ந்தலுமே இன்னும்  நிலவுள்ளது..
பாதி உயிர் போன போதும் மீதி வாழ்வுள்ளது...


(நேற்று இல்லாத...)

வாழ்க்கை

ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்ந்தோம், ஏதோ மடிந்தோம் என்று சமூகத்திற்கு பயனில்லாமல் வாழ்கின்ற வாழ்க்கை எதற்கு?

ஒவ்வொரு மனித வாழ்வும் ஒரு சரித்திரம் ஆக வேண்டும்..

சமூகம் அதனால் பயன் பெற வேண்டும்...

நம் வாழ்வு ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் அமைய வேண்டும்...


அதுதான் வாழ்க்கை...

ஏதோ ஒருவனுக்காவது நம் வாழ்வு ஒரு தூண்டுகோலாய் அமைய வேண்டும் என்ற இலட்சியத்தோடு வாழு...

வாழ்க்கை ஒரு பரிசு, அதை விரயமாக்கி விடாதே..

ஒவ்வொரு வாழ்க்கையின் மதிப்பும் யாருக்கும் வாழும் போது தெரிவதில்லை, அதை இழந்த பின்பு தான் தெரிகிறது...

நாமாவது இப்போதே உணர்ந்து இவ்வாழ்வை பொருள் உள்ள ஒன்றாக வாழுவோம்....!

Thursday, November 24, 2011

சாதியத்திற்கு எதிரான போர் முழக்கம்

மனிதனை மனிதனாய் பார்க்க தெரியாதவனும், மனிதனை சாதியின் பெயரால் பகுத்து பார்க்க நினைப்பவனும் பகுத்தறிவு அற்றவனே...

இயற்கை மனிதனை உருவாக்கும் போது சாதி உருவாகவில்லையே !

ஏன் மனிதனே உருவாக்கினான் இந்த பாகுபாட்டை...

மனித கண்டுபிடிப்புகளில் மிகமிக கேவலமான கண்டுபிடிப்பு என்றால் அது சாதி தான்...!


அந்த கேவலத்தை வாய் கூசாமல் சொல்லி மார்தட்டி கொள்ளும் அறிவிலிகளை என்னென்று சொல்வது..?


இதில் பெருமை வேறு...என் சாதி காரன் என்று சொல்லி கொள்வதிலும், பெயருக்கு பின்னே சாதி பெயரை சேர்த்து கொள்வதிலும் பெருமை பட்டு கொள்கிறார்கள் ...


இதில் மிக கொடுமை என்னவென்றால், படித்தவர்கள் கூட சாதியத்திற்கு துணை போவது தான்...


அவர்கள், பேசாமல் வாங்கிய பட்டத்தை தீயில் கருக விட்டு ஐந்தறிவு உயிரினம் போல் சுற்றலாம்...ஐயகோ! ஐந்தறிவு உயிரினம் கூட சாதி பார்பதில்லயே ...அப்படியென்றால் அவர்கள் அதற்கும் கீழா?

கற்றிருந்தும் மடையர்களாய் வாழ்வது முறையா?

நட்பில் சாதியம்  பார்க்காதவர்கள் கூட மண வாழ்க்கையில் சாதியம் பார்க்கிறார்களே..இதை என்னவென்று சொல்வது ...

இன்னும் மனித இரத்தத்தில்  சாதியம் ஏதோ ஒரு இடத்தில் ஓடி கொண்டிருக்கிறது என்று தான் கொள்ள வேண்டும் போலிருக்கிறது !

சமூகம் பார்க்க ஒரு வேடமும், சுய வாழ்க்கைக்கு மற்றொரு வேடமுமா?

என்ன ஒரு அவமானம்....!

எத்தனை எத்தனை கல்வி அறிவிருந்தும், இப்படி செய்பவர்களை பார்த்தால் என்ன சொல்வது என்று தெரியவில்லை...!

இயற்க்கையில் எந்த உயிரினமும் பார்க்காத சாதியை மனிதன் மட்டும் ஏன் பார்க்கிறான் ?

இயற்கை சாதியை பார்த்தா மழை பொழிகிறது?

இயற்கை காட்டாத பாகுபாட்டை மனிதன் மட்டும் காட்டுவது ஏன் ?

நாம் செய்வது இயற்கைக்கு எதிரானது அன்றோ ...!

நம் அனைவருக்கும் தாயான இயற்கையை நாம் எதிர்க்கின்றோமே, இது நியாயமா?

படித்தவர்களே, ஞானிகளே, அறிவு ஜீவிகளே.... கொஞ்சம் சிந்தியுங்கள்...

நம் மண்ணில் இன்னும் சாதியின் பெயரால் குருதி படியலாமா! ஒற்றுமையாய் வாழலாமே...!

கடந்த காலங்களில் சாதியின் பெயரால் நடந்த கொடுமைகளை மறப்போம்... 

நம் சந்ததியினராவது சாதியில்லா காற்றை சுவாசிக்கட்டும்..!

சாதியம்  என்னும் களை வேரோடு கிள்ளி எறியப்பட்டால்தான் இந்த சமுதாயம் உய்வு பெறும்....!

Saturday, May 7, 2011

சந்தர்ப்ப சூழ்நிலை

சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளிகள் ஆனவர்களை விட சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளிகளாய் சித்தரிக்கப்பட்டோர் அதிகம். . .