Sunday, January 15, 2012

மனிதனாய் வாழ விரும்புகிறேன்

நான் சிறு வயதில் கோயிலில் ஒரு பாடல் கேட்டதுண்டு ...
ஒரு அருமையான பாடல் அது...
"ஒரு வரம் நான் கேட்கின்றேன், திருப்பதம் நான் பணிகின்றேன்;
மனிதனாக, முழு மனிதனாக...வாழும் வரம் நான் கேட்கின்றேன்.."
இந்த பாடலை பலரும் கேட்டிருக்கலாம்... குமரி மாவட்டத்தில் இந்த பாடல் ஒலிக்காத ஆலயமே இல்லை என்று சொல்லலாம்...

இன்றைய உலகிற்கு தேவையான ஒரு சிந்தனை  அந்த பாடலில் உள்ளது..
ஒவ்வொரு  மனிதனும் பின்பற்ற வேண்டிய சிந்தனை!

"மனிதனாய் வாழ்" என்கின்ற சிந்தனை தான் அது...

இன்றைய சமூகத்தில் மனிதன் சாதியாலும், மதத்தாலும் பிரிந்து கிடக்கிறான்...
ஒன்றும் இல்லாததற்கு நாம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்...

மனிதனை மனிதனாய் வாழ வைக்க உருவானதே மத அமைப்புகள்..ஆனால் அவையோ இன்று மனிதநேயத்தை மறந்து, மனிதனுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் ஒரு சக்தியாக மாறி வருகின்றதோ என்ற ஐயமே எனக்குள் இப்படி ஒரு சிந்தையை தட்டி எழுப்பியுள்ளது...

எனக்கு பிறப்பு கொடுத்தது ஒரு சாதியோ மதமோ அல்ல, மாறாக ஒரு மனித தாயானவள் தான்...அப்படியென்றால் நான் முதலில் மனிதன் தானே...

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மதத்தை பற்றி ஒரு கருத்து இருக்கும்... என்னை பொறுத்தவரையில், கடவுளை அடைய ஒவ்வொருவரும் பின்பற்றும் ஒரு வழி முறையே மதம்.. மதங்கள் வெவ்வேறு இருக்கலாம், ஆனால் அவை சேரும் இடம் ஒன்றே.. ஒவ்வொரு மதமும் அவை பின்பற்றும் சடங்கு முறைகளால் மட்டுமே வேறுபடுகின்றன (different style of worship). அனைத்து மதமும் போதிப்பது அன்பு மட்டுமே... அப்படியென்றால் "அன்பு" தானே அனைத்துக்கும் அடிப்படை... ஆகவே அன்பை மட்டுமே நாம் பின்பற்றலாமே... நாம் எந்த வகையில் குறைந்து விட போகிறோம், நம் அன்பை மற்றவர்களுக்கு காட்டும் போது... மதம் என்ற போர்வையை நாம் களைந்து எறிவோம், அன்பு என்ற ஆடையை அணிவோம், உலகை அன்பால் நிரப்புவோம்... நாளைய சமுதாயமாவது பிரிவு இல்லாமல் இருக்குமே.. அன்பை நிலை நாட்டவே கடவுள் இப்புவிக்கு வந்தார், அவதாரம் எடுத்தார் என்று படிக்கின்ற நாம் ஏன் அன்பை விடுத்தது விட்டு மதத்தை பற்றி பிடித்து கொண்டிருகிறோம்...

நாம் மனிதர்கள் என்பதை முதலில் உணருவோம்...!

"அன்புதான் என் மதம், மனிதம்தான் என் சாதி..."


நான் ஒரு கிறித்தவனகவோ, இந்துவாகவோ, இஸ்லாமியனாகவோ வாழ விரும்பவில்லை, மாறாக "மனிதனாய்" பிறருக்கு "அன்பு" காட்டி வாழ விரும்புகிறேன்......


என்னை வாழ விடுவீர்களா?